சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்டவர் . பல நற்பணிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் கொடைக்கானலில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீக்கு எதிரான விழிப்புணர்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி .
அதில் அவர் பேசியதாவது "கோடை வெயிலுக்கு இதமளிக்கிற இயற்கை தந்த கொடை கொடைக்கானல். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை இது ஒரு கனவு பிரதேசம். வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் என பல உயிரினங்கள் அங்கே வாழ்கின்றன . இது நெருப்புகாலம் என்பதால் எளிதில் பற்றிக்கொள்ளும் நிலைமையில் காடு இருக்கிறது. சிறு தீப்பொறி பட்டால் போதும் காடோடு சேர்ந்து மரங்கள், பறவைகள் என அனைத்தும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிராக இந்த போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம் என்று கார்த்தி வீடியோவில் கூறியுள்ளார் .